457. ஆல்வா எடிசனுக்கு ஆற்காடு வீராசாமி அஞ்சலி - கி.அ.அ.அனானி
தமிழ் நாட்டில் தான் மின்சார உற்பத்தி பிரச்சினை இருக்கிறதே..ஏதோ நம்மாலானது..கணினியை பயன் படுத்தாமல் மின்சாரத்தை மிச்சப் படுத்தலாமே என்று ரொம்ப நாளாக டி.வி பார்க்காமலும், வலைப்பதிவுகளை லுக் உட கணனியை ஆன் செய்யாமலும் இருந்தேன் (இதுனால எனக்கோ அல்லது நாட்டுக்கோ அல்லது தமிழ் கூறும் நல்லுலகுக்கோ எந்த நஷ்டமும் இல்லை அப்படீன்னு நீங்க சொல்லுறதும் சரிதான்) .
ரொம்ப நாளுக்கு பிறகு இன்று தான் 'நிலைமை சீரடைந்து விடும்' என்று ஆற்காடு வீராசாமி கொடுத்த தைரியத்தில் ஒரு பத்து நிமிடம் டி வி பார்த்துக் கொண்டிருந்தேன். விஜய் டிவியில் 'தமிழ் பேச்சு எங்கள் மூச்சு' என்று ஏதோ ஒரு நிகழ்ச்சி . அதில் பேச்சாளர் தாமஸ் ஆல்வா எடிசன் ( பல்ப் கண்டு பிடிச்சாரே அவர்தான்) மறைந்த தினத்தில் அமெரிக்கர்கள் "அனைத்து மின்சார விளக்குகளையும் அணைத்து" அவருக்கு அஞ்சலி செலுத்தினார்கள். தேவாலயத்திலும் கூட வெறும் மெழுகு வர்த்திகளை மட்டும் ஏற்றி வைத்து அஞ்சலி செலுத்தினார்கள் என்று உணர்ச்சி பொங்க பேசிக் கொண்டிருந்தார். இதைத்தான நம்ம ஆற்காடு வீராசாமி அமல் படுத்தி தமிழகத்துல தினம் தோறும் தாமஸ் ஆல்வா எடிசனுக்கு அஞ்சலி செலுத்திக்கிட்டிருக்காரு.
அவருடைய விஞ்ஞானத்தின் மேலான அபரிமிதமான மரியாதைக்கு ஏன் மக்கள் இப்படி அராஜகமா எதிர்ப்பு தெரிவிக்கிறாங்க அப்படீன்னு ஆச்சரியப் பட்டுக்கிட்டு அப்படியே வேறு சானலுக்கு போனால் அங்கு ஆற்காடு வீராசாமி உண்மையாகவே வீராவேசமாக சாமியாடிக் கொண்டிருந்தார், மேட்டர் என்ன என்றால் மின் வெட்டுக்காக அவரையும் முதலமைச்சரையும் பதவி விலகச் சொல்லி சில பல எதிர்க்கட்சிகள் சொல்லியிருந்ததற்கு அவர் தர்க்க ரீதியாக விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்தார்?!!!
"தமிழகத்தில் எம்ஜியார் காலத்திலும், பின்னர் ஜெயலலிதா காலத்திலும் மின் வெட்டு இருந்திருக்கிறது.அவர்கள் அப்போது பதவி விலகி முன்னுதாரணமாக திகழ்ந்திருந்தால் இப்போது எங்களைச் சொல்லலாம்.அப்படி அவர்கள் செய்யவில்லையே" என்று புத்திசாலித்தனமாக கேட்டுக் கொண்டிருந்தார். அது சரி.. "நீங்க சுயமா யோசிக்க மாட்டீங்களா? நீங்க எதுக்கும் முன்னுதாரணமாக இருக்க மாட்டீங்களா? என்று எழுந்த கேள்விகளை மனதுக்குள் அடக்கிக் கொண்டு அடுத்த சானலுக்கு போகலாம் என்று ரிமோட்டை எடுத்தால் படக்கென்று டி.வி அணைந்து விட்டது. வேறென்ன "தாமஸ் ஆல்வா எடிசனுக்கு ஆற்காடு வீராசாமியின் இன்றைய அஞ்சலி " தொடங்கி விட்டது.
---கி.அ.அ.அனானி
7 மறுமொழிகள்:
Test !
:))))
இன்னும் எவ்வளவு காலத்துக்கு தான் இப்படி ஆற்காடு காலத்தை ஒட்டி கொண்டிருக்க போகிறார் தெரியாய வில்லை. பாலா உங்கள் குட்டு உரைத்தால் சரிதான். ஆனால் இவர்கள் நம்மை மரக்கட்டைகள் எண்டு எண்ணி கொண்டிருக்கிறார்கள்.
எப்போதும் போல் நன்றி பாலா சார்
ஜோ
சிரிப்பானுக்கு அர்த்தம் என்னான்னு சொன்னா நாங்களும் சிரிப்போமுல்ல :)
கி அ அ அனானி
ராஜாராமன்
கருத்து பகிர்தலுக்கு நன்றி.
கி அ அ அனானி
உண்மைக்கும் புகழ்ச்சிக்கும் சிறிது வித்தியாசம் உண்டு. புகழ்ச்சி அநேகமாக ‘மெருகு கொடுத்த உண்மை’யாகத்தான் இருக்கும். சிறிது காலமாவது பளபளவென்று அசாதாரணமான ஒளியுடன் அது மனதைக் கவரும். ஆகவே, புகழ்ச்சியில் உண்மை இருக்கும்; எனினும் வெளிப்படத் தோன்றுவதவ்வளவு அத்தனையும் உண்மையாக இராது
:-))))
Post a Comment